‘ஜனாதிபதியும் நாங்களும் ஒரே கருத்துடையவர்கள்.. ரணில் ஜனாதிபதியாகி , சஜித் பிரதமரானால் மிக சிறப்பு – ராஜித சேனாரத்ன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமது குழுவினரும் ஒரே சித்தாந்தத்தை கொண்ட குழு என SJB பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் கூட தடுமாறி, நாட்டின் போக்கு மாறினால், சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால் , இலங்கையால் சர்வதேச கடன் கடிதத்தை கூட திறக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் ராஜித கூறுகிறார்.

ஒரு சிலர் கூறும் பொய்யான கதைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியும் மத்திய வங்கியும் இணைந்து கருவூலமாகச் செயற்படுவதன் மூலம் நாட்டுக்கு பலன் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டை அழித்துவிட்டு எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் பயனில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சேனாரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, இணையத்தளமொன்றில் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ள அவர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் மிகவும் நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.