பால்நிலை உணர்திறன் செயலமர்வு.
பால்நிலை உணர்திறன் செயலமர்வு துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை( 30) காலை 09.00மணி தொடக்கம் பி.ப 2.00மணி வரை பால்நிலை உணர்திறன் (Gender Sensitivity) தொடர்பான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
இச் செயலமர்வில் வளவாளராக பெண்ணிய செயற்பாட்டாளர் சுமித்திரா செல்லத்தம்பி அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த செயலமர்வில் சிறுவர் மற்றும் பெண்கள் சார்ந்த உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.