ரணிலுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க முடியாது – மொட்டு கட்சி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அவருக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இவ்வாறான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.