மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் 5 பேர் உயிரிழப்பு…!
மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் டார்ஜிலிங் கூடுதல் எஸ்பி அபிஷேக் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் சிக்னலில் நிற்காமல் அந்த சரக்கு ரயில் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அறிந்தவுடன் மருத்துவர்கள், தேசிய பாதுகாப்பு படையினர், ஆம்புலன்ஸ், மீட்புப்படையினர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்திருப்பதாக முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், உயர் அதிகாரிகள் அந்த இடத்தை விரைவாக அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.