கிண்ணம் வென்றது ஆவரங்கால் மத்தி, போராடித்தோற்றது புத்தூர் வளர்மதி.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் (29-09-2020) செவ்வாயன்று இரவு இடம்பெற்றது!
சங்க வாலிபன் கோபிதன் தலைமயில் ஆரம்பான இந்நிகழ்வில் விருந்தினர்கள் அழைப்பு, வரவேற்புரை, தலமையுரையுடன் இறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்போடு ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆரம்பமாகியது.

5 சுற்றுக்களைக்கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றினை ஆவரங்கால் மத்தியும் பதிலுக்கு 2ம் சுற்றினை புத்தூர் வளர்மதியும் தன்வசபடுத்த இறுதியாட்டம் வீறுகொண்டது! 3வது சுற்றின் ஆரம்பத்தில் புத்தூர்வளர்மதி தாக்கம் செலுத்தியபோதும் இறுதியில் ஆவரங்கால் மத்தி தனது அதிரடி ஆட்டத்தால் சுற்றை தன்வசபடுத்த 3ம்,4ம் சுற்றுக்களையும் வென்று இறுதியாட்டத்தின்வெற்றியாளராகி கிண்ணத்தை தனதாக்கியது!
ஆட்ட நாயகனாக ஆவரங்கால் மத்தி வீரன் சிந்துயன் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைதொடர்ந்து பரிசில் வழங்கும் நிகழ்வுகள், விருந்தினர் உரை என்பவற்றோடு விழா சிறப்புநிறைவெய்தியது.
