விஜேதாசவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அறிவித்தாரா?
அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்சண பியதாச தெரிவித்தார்.
விஜேதாச ராஜபக்ஷ நீதித்துறை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்து வருவதுடன், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் அந்த பதவியில் பணியாற்ற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் குறித்த அறிக்கையை நிராகரித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.