வயநாடு தொகுதி MP பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி MP பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதன் முறையாக களமிறங்கினார்.

இதில் தனது தாய் கடந்த தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட அதிக வாக்கு பெற்று வெற்றிப் பெற்றார். இதில் அவர் வென்றுள்ள இரண்டு தொகுதிகளிலும் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே MP ஆக இருக்க முடியும்.

இந்நிலையில் ராகுல் காந்தி வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டியதால் ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.

அதன்படி வயநாடு பகுதியில் இருந்து பதவி விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதம் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், மல்லிகார்ஜூன கார்கேவைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளுடனும் தனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பதாகவும் பிரியங்கா காந்தி வதேரா வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார். வயநாடு தொகுதிக்கு நானும் அவ்வப்போது சென்று வருவேன் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.