யாழ். மீனவப் பிரச்சனைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த சஜித்.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை , பொலிகண்டி பகுதியில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும், மீன்பிடி படகுகளுக்கு நங்கூரமிட முடியாத நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தின் ஆழத்தை சீர் செய்து மீன்பிடி படகுகள் நங்கூரமிடுவதற்கு வசதி செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்தை ஈர்த்து பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், 2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின்படி, கடலின் அடிப்பகுதியில் வலைகளை இழுத்து மேற்கொள்ளப்படும் (bottom trawling) ஆழமான இழுவைப் படகு தொழில் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் அடிமட்ட இழுவையை (bottom trawling) நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இது இன்னும் யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கண்காணிப்பு குழு அறிவித்த போதிலும் தீர்வு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் கீழடி இழுவைப் படகு (bottom trawling) தொழிலுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் , இது தொடர்பில் கடற்றொழில் அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் என்ற பிரச்சினை உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.