கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்தில் தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கூறியிருப்பதாவது:

“கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.