மொட்டா அல்லது மாற்றுக் குழுக்களா? ரணிலை மாற்று அணிகள் முடிவெடுக்க அழுத்தம்.

எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதிக்கும் , பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் துமிந்த திஸாநாயக்க , நிமல் சிறிபால த சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும் மாற்றுக் குழுக்களும் ஒன்றிணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மொட்டுவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜனாதிபதியுடன் செல்வதில் தமக்கு உடன்பாடில்லை எனவும், மொட்டு கொள்கைகளுக்கு எதிரான ஒரு குழுவுடன் தான் இருப்பதாக, நாமல் ராஜபக்ஷ கூறும்போது, ​​நாமலின் பேச்சு ஏமாற்றத்தையே ஏற்படுத்தும் என கலந்துரையாடலுக்கு வந்த வஜிர அபேவர்தனவிடம் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் மொட்டு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களில் ஒன்றை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என மாற்றுக் குழுவின் பேச்சாளர் அங்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.