தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 34 பேர் மரணம் – சாராயத்தில் நச்சு இருந்ததாகக் கூறிய முதல்வர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்த 34 பேர் மாண்டனர்; சுமார் 100 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சாராயத்தில் நச்சுப் பொருளான மெத்தனால் (Methanol) சேர்க்கப்பட்டதாய் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாய் PTI செய்தி நிறுவனம் உட்பட இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தெருக்களில் தயாரிக்கப்படும் கள்ளச் சாராயம் குடித்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் மடிகின்றனர்.
மதுவின் போதையை அதிகரிக்க அதில் அதிக அளவில் மெத்தனால் சேர்க்கப்பட்டுக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாய் விற்கப்படுகிறது.
இவற்றைக் குடிப்போருக்குக் கண் பார்வை இழப்பு, கல்லீரல் சேதம் ஆகியவற்றோடு சில வேளைகளில் மரணங்களும் ஏற்படுகின்றன.