“குரோஷியா வெற்றிபெறும்போது என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்”- பயிற்றுவிப்பாளர்
குரோஷியா அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்லாட்கோ டாலிக் (Zlatko Dalic) தம்மைக் குறைகூறுபவர்களைச் சாடியிருக்கிறார்.
யூரோ 2024 போட்டிகளில் குரோஷியா அல்பேனியாவுடன் சமநிலை கண்டது. அதற்கு முன் ஸ்பெயினுடன் மோதிய ஆட்டத்தில் தோற்றது.
Group B ஆட்டத்தில் குரோஷியா இத்தாலியைத் தோற்கடிக்கவேண்டும். இல்லையேல் அது அடுத்த சுற்றுக்கு 16 அணிகளில் ஒன்றாக வர முடியாது.
அதனால் பயிற்றுவிப்பாளர் டாலிக்கைக் குரோஷியர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் குரோஷியா இறுதிச்சுற்று வரை சென்றது. 2022இல் அரையிறுதி ஆட்டம் வரை தகுதிபெற்றது. அவை அனைத்திலும் பயிற்றுவிப்பாளராக இருந்தவர் டாலிக்.
“குறைகூறல்கள் பழகிவிட்டன. வெற்றியோ தோல்வியோ அது என் பொறுப்பு. வெற்றி பெறும்போது எனது பங்கை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அது தற்செயலாக நடந்ததாகக் கூறுவார்கள். குரோஷியாவில் இப்படித் தான்,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.