எங்களை ஒரு தடவை வேண்டாம் என்றால் – எங்களுக்கு நூறு தடவைகள் வேண்டாம் நீங்கள் – ரணில் முன்னிலையில் கத்திய பசில்.
ஒருமுறை எங்களை வேண்டாம் என்றால் 100 முறை எங்களுக்கும் வேண்டாம் என பசில் ராஜபக்ஷ , ஜனாதிபதி முன்னிலையில் பிரசன்ன ரணதுங்கவின் முகத்தில் அடித்தால் போல கத்தியதாக மொட்டு உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷவுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பிலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது நண்பர்களான மொட்டு கட்சியின் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பினரையும் இந்த சந்திப்பிற்கு அழைத்துள்ளார்.
அது தொடர்பில் பசிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது, ராஜபக்சக்களின் தலைமையில் அல்லாமல், மொட்டு கட்சியின் பங்கேற்புடன் கூடிய பரந்த கூட்டணிக்கு அனுமதி வழங்குமாறு, கூட்டணியில் இணைய விரும்பும் ஏனைய கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே பசில் ராஜபக்ஷ கோபமடைந்துள்ளார்.
இவ்வாறு ராஜபக்சக்களை ஆட்டிப்படைக்க இடமளிக்க மாட்டேன் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, நீங்கள் எங்களை ஒரு முறை வெறுத்தால் 100 முறை வெறுப்போம் எனவும் கூறியுள்ளார்.