ராஜிதவின் பாய்ச்சல் உறுதி… அடுத்த மாதம் முதல் வாரத்தில் ராஜித சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்…
சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரது பதவிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த மாதம் இறுதி சில நாட்களில் சந்திக்கவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சுகாதார அமைச்சு, பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருந்து ஒழுங்குமுறை ஆணையம் போன்ற பல உயர் பதவிகள் மாற்றப்பட உள்ளதாகவும் தெரியவரகிறது.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 5 நபர்களை தேடும் போலீசார்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்கள் தொடர்பில் பியூமியிடம் விசாரணைகள்..