பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 5 நபர்களை தேடும் போலீசார்

ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் ஐந்து இளைஞர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி, தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, ​​பலாத்காரம் செய்ததாக, சிறுமி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கொஸ்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் பொசன் பொஹோயா அன்று காலை தனது சிறிய தாயுடன் தன்சலுக்கு செல்வதாக சென்று , பின்னர் தனது காதலனை சந்திக்க புத்தக கடைக்கு செல்வதாக கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.