மன்னார் பாலம் அருகே இருந்த சோதனை சாவடி அகற்றப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக இருந்த பிரதான இராணுவச் சாவடியை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இந்த சோதனைச் சாவடியால் சுற்றுலாப் பயணிகளும், பயணிகளும் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சோதனைச் சாவடியை அகற்றக் கோரி அரசு உயர் அதிகாரிகளிடம் மனுக்களும் , கடிதங்களும் இந்த ஆர்வலர்களால் வழங்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நேற்று (21) இந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் இன்னும் அங்கேயே இருப்பதாக சிவில் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.