யூரோ கால்பந்து: துருக்கியை வீழ்த்தியது போர்ச்சுக்கல் அணி!
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும்,தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள்,3வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் – துருக்கி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் பெர்னார்டோ சில்வா முதல் கோல் அடித்தார். பின், 28வது நிமிடத்தில் துருக்கி வீரர் சமேத் அகாய்டின் ‘சேம்சைடு’ கோல் அடித்து துருக்கி அணியின் வெற்றிக்கு உதவினார். முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் 56வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய துருக்கி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் செக்குடியரசை வீழ்த்திய போர்ச்சுகல் அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து ‘ரவுண்டு-16’ சுற்றுக்கு முன்னேறியது.