பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள்!

பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள் இருந்துள்ளது.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல உணவகத்திற்கு குணா என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
தொடர்ந்து, நல்லி எலும்பு பிரியாணி வாங்கி உணவத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நல்லி எலும்பை உடைத்த போது, அதன் உள்ளே புழுக்கள் நெளிந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குணா உணவக நிர்வாகியிடம் வாதிட்டுள்ளார். ஆனால், நிர்வாகி எந்த பதிலும் கூறாமல், தன்னை காக்க வைத்ததாக குணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பிரியாணியை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.