ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு திவாலான நிலையில் இருந்து வெளியே வந்துள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. இப்போது இலங்கைக்கு உலகத்துடன் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று அவர் அங்கு கூறினார்.