“எங்கள் நாடு எங்கள் கைகளில்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரப்பத்தனை சென்.ஜோர்ஜ் முன்பள்ளி பாடசாலையில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர் புஸ்பராணி தலைமையில் இடம்பெற்றது.
“எங்கள் நாடு எங்கள் கைகளில்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது, ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலமானது அக்கரப்பத்தனை நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஹோல்புறுக் நகரம் வரை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
அதன்பிறகு, பாடசாலையின் வளாகத்தில் மரநடுகை இடம்பெற்றது. அத்தோடு, சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பிரிடோ நிறுனத்தின் இணைப்பாளர் கு.புஸ்பராஜ், பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி பொறுப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.