தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை மாற்றினால் பேரழிவு ஏற்படும்.
பல தியாகங்களின் பின்னர் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களும் மாற்றங்களும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கிறார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் இலக்குகளை விட முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை தொடர்வதன் மூலம் மிக குறுகிய காலத்தில் இலங்கை பெரும் முன்னேற்றத்தை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர் திரு. ஷெஹான் சேமசிங்க X-செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் அவர்களின் பொருளாதார ஆலோசகர்களும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுமையான தியாகங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள நிதியமைச்சர், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை தவிர்க்குமாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஆலோசகர்களிடம் கேட்டுக்கொள்கிறார்.