மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) இந்தியாவில் அறிமுகம்

வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) சேவை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடா்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான ‘மெட்டா ஏஐ’ இப்போது வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா.ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்டா ஏஐ’ சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ‘மெட்டா ஏஐ’ சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் ‘மெட்டா ஏஐ’ சேவையை அணுகலாம். உதாரணமாக, ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்தப் பதிவு குறித்த மேலும் பல தகவல்களை ‘மெட்டா ஏஐ’ சேவையிடம் கேட்டுப் பெறலாம்.

Leave A Reply

Your email address will not be published.