செய்தி நல்லது : கொழும்பு முழுதும் ரணிலின் போஸ்ட்டர் மயம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இன்றைய தின சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் இணைய பதாகைகள் மூலம் “ஆரஞ்சிய சுபய் ” என முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அந்த ‘நல்ல செய்தியை’ அறிவிக்க உள்ளார்.
‘நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்றினேன்’ என்பதுதான் அந்த செய்தி.
அதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியில் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்வதும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை சரியான முறையில் தொடர்வதும் அவசியமானது எனவும், எனவே அதனைத் தொடர்ந்தும் பேணுவது அவசியம் எனவும் அவர் கூற உள்ளார்.
கொழும்பு மாநகரம் முழுவதிலும் ‘ஆரஞ்சிய சுபய்’ என்ற விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் பச்சை மற்றும் மொட்டு நிறத்தில் அந்த விளம்பரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவிக்கவுள்ள ஜனாதிபதி ரணில் பொது வேட்பாளராக , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், பொஹொட்டுவ மற்றும் சஜபவின் (SJB) ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெறுவார் எனவும் அரசியல் செய்திகள் கசிந்துள்ளன.
இதை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் நாட்களில் பெருமளவானவர்கள், அமைச்சர்களாக ரணில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.