காணி உறுதி வழங்குவதை தடுக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் தேடப்படுகின்றன.

உருமய காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை, சிலர் அதனை நாசப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பாறையில் தெரிவித்தார்.

இவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் கேட்ட ஜனாதிபதி, அதே தகவல்களை தனக்கும் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் பாரம்பரிய உரிமத்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கட்சி, எதிர்ப்புகள் இன்றி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உறுமய 20 வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1654 பேருக்கு காணி உறுதிகளை அடையாளமாக வழங்கும் நிகழ்வில் நேற்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.