இந்திய மீனவர்களுடனான மோதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழ். மீனவர்கள் பங்கேற்பு!
யாழ். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மீனவர்கள் மூன்று பஸ்களில் குருநாகல் செல்கின்றனர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசேட படகுகள் அணியில் கடமையாற்றும் ரத்நாயக்கவின் (வயது 40) இறுதி நிகழ்வு இன்று வியாழக்கிழமை குருநாகலில் இடம்பெறுகின்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கடற்படை வீரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவே யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 3 பஸ்களில் மீனவர்கள் பயணிக்கின்றனர்.