கொல்லப்பட்ட சிங்கப்பூர்ப் பெண்ணுக்குச் சந்தேக நபரைப் பத்தாண்டுகளுக்கு மேல் தெரியும்.

ஸ்பெயினில் கொல்லப்பட்ட ஆட்ரி ஃபாங்கிற்குச் (Audrey Fang) சந்தேக நபரைப் பத்தாண்டுகளுக்கு மேல் தெரியும் என்று ஃபாங்கின் இரு நெருங்கிய நண்பர்கள் ஸ்பெயினின் நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர்.

சிங்கப்பூரில் இருந்த இருவரும் காணொளி வழி சாட்சியமளித்தனர்.

ஃபாங்கின் வழக்கறிஞர் வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஃபாங்கைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மிட்ச்சல் ஓங்கை (Mitchell Ong) ஃபாங் காதலித்ததாகச் சாட்சிகள் இருவரும் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

ஆனால் ஓங் ஃபாங்கிடம் சொத்துகளை விற்பதில் மட்டுமே குறியாக இருந்தது போன்று தெரிந்ததாக அவர்கள் கூறினர்.

ஃபாங் ஓங்கை ஸ்பெயினில் சந்திக்கத் திட்டமிட்டதோடு அவரைத் தமது குடும்பத்திற்கு அறிமுகம் செய்ய நினைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஓங் அதற்கு இணங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஸ்பெயினுக்குத் தனியாகச் சென்ற ஃபாங் 30 கத்திக்குத்துக் காயங்களுடன் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

சம்பவத்தின் தொடர்பில் ஓங் ஏப்ரல் 16ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.