Netflix சேவை இலவசம்?
Netflix காணொளித் தளம் இலவசச் சேவையை அறிமுகம் செய்யக்கூடும்.
சேவை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று Bloomberg செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது வாடிக்கையாளர்கள் தளத்தைப் பயன்படுத்தப் பணம் செலுத்துகின்றனர். அவர்கள் விளம்பரங்களையும் பார்ப்பதில்லை.
இலவசச் சேவையில் பயனீட்டாளர்கள் விளம்பரங்களைப் பார்க்கவேண்டியிருக்கும்.
புதிய சேவையை அறிமுகம் செய்தால் Netflix தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கூடும்…
விளம்பரத்தால் கிடைக்கும் வருவாயும் கூடும் என்று நிறுவனம் எண்ணுகிறது.
உலகின் ஆகப் பெரிய காணொளித் தளங்களில் ஒன்றாக அது திகழ்ந்தாலும் தற்போது அது ஈட்டும் விளம்பர வருவாய் மிகவும் குறைவு. அதைச் சமாளிக்கப் புதிய சேவை உதவக்கூடும்.
அப்படி இலவசச் சேவையை அறிமுகம் செய்தாலும் அதை அமெரிக்காவில் வழங்க நிறுவனத்துக்குத் திட்டமில்லை என்று Bloomberg குறிப்பிட்டது.
அமெரிக்காவின் உத்தேச வாடிக்கையாளர்களில் பெரும்பாலோரை Netflix எட்டிவிட்டதாக அது சொன்னது.