பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரை பற்றிய குறிப்புகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 -ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விடயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.