எதிர்காலத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட்டால் ஆசிரியர்கள் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும் : ஜனாதிபதி.
ஒரு சில அரசியல்வாதிகள் ஆசிரியர் தொழிலையே அழித்து வருகின்றனர்… வேலை நிறுத்தம் காரணமாக சிங்கள பாடசாலைகளில் மாத்திரம் கற்பித்தல் நடக்கவில்லை… தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலும் தனியார் பாடசாலைகளிலும் கற்பிக்கின்றார்கள்… ஜனாதிபதி அஸ்கிரி மகா நாயக்க தேரர் முன்னிலையில் வலியுறுத்தல்!
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் கண்டிப்பாக காலை வேளைகளில் பாடசாலைகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காது பாடசாலை மாணவர்களின் கல்வியை பறிகொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவை அத்தியாவசிய சேவையாகும் எனவும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று (27) காலை அஸ்கிரிய கட்சியின் மகாநாயக்கர் அதிபூஜ்ய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களும், அதிபர்களும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சில ஆசிரியர்கள் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களில் ஈடுபடும் போது குழந்தைகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்க அவர்களுக்கு எந்தளவு திறமை இருக்கின்றது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். .
இந்த நெருக்கடியானது முழு ஆசிரியத் தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் சார்பு கொண்ட சில ஆசிரியர்களே இதில் ஈடுபட்டுள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், ஒரு குழுவினரால் முழு ஆசிரியர் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். .
அத்துடன், சிங்களப் பாடசாலைகளில் மாத்திரமே இந்த நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம் மற்றும் தனியார் பாடசாலைகள் பிள்ளைகளுக்கான கல்வியைத் தொடர்வதற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
அத்துடன், பாடசாலையின் பாதுகாவலர்களால் சிறுவர்கள் திருப்பி அனுப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர்களின் சம்பளம் 13000 ரூபாயில் இருந்து 17000 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் இவ்வருடம் மீண்டும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) மல்வத்து மகாநாயக்க தேரர் முன்னிலையில் வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை வழங்குமாறு மல்வத்து மகா நா தேரர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெறாது என அறிவித்த ஜனாதிபதி, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அடுத்த வருடம் முதல் முறையான முறைமையொன்றை தயாரிக்கவுள்ளதாக மல்வத்து மகாநாயக்க தேரருக்கு அறிவித்துள்ளார்.