நாட்டுக்கு நல்லது நடக்க ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் : அரகலய இயக்கம்.
நாடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என மக்கள் (அரகலய) போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி வசந்த முதலிகே இதனைத் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க போன்றோரை துரத்தவே மக்கள் போராட்ட அமைப்பை உருவாக்கினோம்.
இந்த நாடு சுபிட்சமாக வேண்டுமானால் ரணில் தலைமையிலான அரசை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறுகின்றோம்.
இன்று நாட்டில் 26 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். மேலும் முப்பது சதவிகிதம் ஏழைகள் இந்த நாட்டில் உள்ளனர். முப்பத்தாறு சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். நாட்டின் வளங்கள் விற்கப்பட்டு நாடு அழிக்கப்படுகிறது.
இப்போது நூறு மில்லியன் டாலர் கடன் வாங்கப்பட்டுள்ளது. ரணில் கடன் வாங்கி கோப்பையை வென்றுள்ளார். எனவே நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? என்றார் வசந்த முதலிகே.