அதிதியுடன் இணையும் அர்ஜூன் தாஸ்.
இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர், தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதில் தனக்கென தனி குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்கவிருக்கிறார். இப்படத்தை குட் நைட், லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்திற்கு 2022ஆம் வெளியான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்த பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.