நாட்டை கட்டியெழுப்ப திசைகாட்டி அரசும் கடன் வாங்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதிலாக உள்ளது, கடன் வாங்குவதும், குத்தகைக்கு விடுவதும், விற்பனை செய்வதும்தான் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடன் பெறும், அதுவே நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைவாகவே நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன்களாக அவை இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.