8,435 உள்ளூராட்சி நிறுவன பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்கள் அடுத்த மாதம் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்காலிக, சாதாரண, மாற்றுத்திறனாளி, ஒப்பந்த மற்றும் சலுகைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய இத்தகைய நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரதமரும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமே இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.