நம்மவர்கள் வார்த்தைகளை கவனமாக விடவேண்டும்.. எலோன் மஸ்க்கை பொருளாதார கொலையாளி என்று சொன்னது தவறு..- NPP ஹரிணி (Video)

தமது கட்சி உறுப்பினர்கள் வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான கேள்விக்கு அததெரண சேனலில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எலோன் மஸ்க் ஒரு பொருளாதாரக் கொலையாளி என்றும் அவர் கொள்ளையடிப்பதற்காகவே இந்த நாட்டுக்கு பணத்தைக் கொண்டு வருவதாகவும் வர்த்தகக் கூட்டமொன்றில் உரையாற்றிய NPP கட்சியின் ஹதுன்நெத்தியினது கருத்து தொடர்பாக , இலங்கை உயர் சமூகத்தில் பாரிய விமர்சனங்கள் எழுந்தன. எலோன் மஸ்க் குறித்துக் கூட தெரியாத அரசியல் பிரபலங்கள் என வசைபாடல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் யுடிப்களில் வைரலானது.