SJBயின் நிலைப்பாட்டால் ஹிருணிகா கவலை.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் பேசவும், நலம் விசாரிக்கவும் சிறைச்சாலைக்குச் செல்வதை SJBக்கள் தவிர்த்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் ஹிருணிகா பிரேமச்சந்திர முரண்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்காக SJB ஆதரவாளர்கள் ஆஜராகாதமை குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.