பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது!

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் மேற்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பயணிகள் அல்லது பொருட்கள் அல்லது பொதுப் போக்குவரத்து சேவைகளின் போக்குவரத்துக்காக வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் புகையிரதங்கள் உட்பட வீதிகள், புகையிரதங்கள் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்து சேவைகளை எளிதாக்குவதும் பராமரிப்பதும் அத்தியாவசிய சேவையாக சம்பந்தப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.