2039ல் நான் இருக்க மாட்டேன் – ரணில்.

ஜனாதிபதி ரணில் வியாழக்கிழமை (20) மல்வத்து அஸ்கிரி மகா தேரர்களைத் தரிசிக்கச் சென்றிருந்த வேளையில், அவர் பேசிய பேச்சு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஜனாதிபதி , மல்வத்து மகா அஸ்கிரிய பௌத்த பீடாதிபதியை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அறிவித்தார். அதன் பின்னர் ஆசிரியர் பிரச்சினை மற்றும் கண்டியின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்பிறகு, அடுத்த பதினைந்து வருடங்களில் நடக்கப் போவதைப் பற்றி ஜனாதிபதி எதிர்வு கூறினார்.

இப்படிச் செல்லாவிட்டால் இன்னும் பதினைந்து வருடங்களில் இன்னொரு நெருக்கடி ஏற்படும்.

“பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் நெருக்கடி இதைவிட மோசமாக இருக்கும் என்று என் கையால் உங்களுக்கு எழுதி தருகிறேன். நீங்களும் இருக்கப் போவதில்லை. நானும் இருக்கப் போவதில்லை. ஆனால் நாட்டு மக்கள் வாழ்வார்கள்,” என்றார் ஜனாதிபதி.

(தற்போது 75 வயதாகும் ரணில் விக்கிரமசிங்க 15 வருடங்களில் அதாவது 2039க்குள் 90 வயதாகியிருக்க வேண்டும்.)

முருந்தெணிய அஸ்கிரி தரப்பு குழு உறுப்பினர் தம்ம ரதன தேரர் , ஜனாதிபதியிடம்“உங்களால் தான் நாடு இவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பாய்ச்சல் இன்னும் ஐந்து வருடங்கள் எடுத்தால் நல்லது.” என்றார்

அவருடைய பேச்சை மகாநாயக்கர்கள்ஆமோதித்தனர். “பயப்பட ஒன்றுமில்லை. தேர்தலுக்கான நல்ல அணி இது” என முருந்தெணிய தம்மரதன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நீதித்துறை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் மகா நாயக தேரரிடம் வினவிய போது ஜனாதிபதி மிக எளிமையாக விளக்கமளித்தார். அங்கிருந்த அமைச்சர்களும் நீதிமன்றத்தின் ‘போனகெய்ன்’ விளைவு குறித்து பேசினர்.

“அரசு அதிகாரிகளுடன் பிரச்சனை இருக்கிறது. கச்சேரியில் நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வளர்ச்சி அலுவலர்கள் மக்களுக்காக பணியாற்றுவது குறைவாக உள்ளது. அவர்கள் கிராமங்களுக்கு செல்வதில்லை. இதைப் பற்றித் தேடிப்பாருங்கள்” என தாம் எதிர்கொண்ட அனுபவத்துடன் மகா நாயக்க தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.