மொட்டு வேட்பாளர் தம்மிக்க.. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார்..
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கான தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு தமக்கு கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் இணையப்போவதாக கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு வழங்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.