ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க நினைத்தால் , அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க எவரேனும் நினைத்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வழமையான மோசமான அரசியலை புகுத்துவதற்காக பொஹொட்டுவ குழுவுடன் இணைந்து கொள்ள ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு கடன் நெருக்கடியில் இருந்து மீட்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினாலும் அது உண்மையல்ல எனவும் தேசிய ரீதியில் தீர்வுகள் காணப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அரச வருமானத்தையும், நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியையும் அதிகரிப்பதே இந்த நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ரணில் விக்கிரமசிங்க எந்த வேலையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
கண்டியில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்