இரணைமடுக் குளத்தில் மூழ்கி மாயமான முறிகண்டி சிறுவன் இன்று சடலமாக மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்று நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கிக் காணாமல்போன 14 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த முறிகண்டி – வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ருஷாந்தன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி சிறுவன் நீராடுவதற்காகத் தனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுடன் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிக் காணாமல்போயிருந்தார்.
அவரைத் தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும், பிரதேச மக்களும், பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்படுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.