அமசோன் தமிழில் (OTTயில்) 5 முன்னணி இயக்குனர்கள் இயக்கிய படம் ரிலீஸ்

லாக் டவுன் காரணமாக 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் OTTயில் வரிசையாக அடுத்தடுத்த படங்கள் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.
தற்பொழுது 5 முன்னணி இயக்குனர்கள் ஒன்றிணைந்து இயக்கிய படமான ‘புத்தம் புது காலை’ திரைப்படம் அமேசான் ப்ரைம்-ல் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, கௌதம்மேனன், சுகாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய ஐவரும் இணைந்து ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கி உள்ளார்கள்.
சுதா கொங்கராவின் ‘இளமை இதோ இதோ’, கௌதம் மேனனின் ‘அவனும் நானும்- அவளும் நானும்’, சுபாஷினியின் ‘காபி எனி ஒன்?’, ராஜீவ் மேனனின் ‘ரியூனியன்’, கார்த்திக் சுப்புராஜின் ‘மிராக்கிள்’ ஆகிய ஐந்து குறும்படங்ககளின் தொகுப்பாக உருவான ஆந்தாலஜி படம்தான் இந்த ‘புத்தம் புது காலை’.