முழு வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தயாராகும் கிராம சேவகர்கள்.
இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கிராம சேவகர்கள் அனைவரும் நாளையில் இருந்து , கிராம மட்டத்திலான மக்களுக்கு அறிவித்து நாடு முழுவதும் முழு வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக கிராம சேவகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (1) மாலை 5.00 மணிக்கு நடைபெறும் கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் , தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை 2ஆம் திகதி (செவ்வாய்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு கிராம சேவகர்கள் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தொழில்சார் நடவடிக்கைகளுடன் நாடு தழுவிய போராட்டங்களையும் நடத்த தயாராக இருக்குமாறும், பொதுமக்களை அதில் பங்கேற்கச் செய்யும்படி களத்தில் உள்ள மக்களை அறிவூட்டுமாறும் அனைத்து உறுப்பினர்களையும் அறிவித்ததாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாளைய கலந்துரையாடலில் கலந்து கொண்டாலும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிராம தொழிற்சங்க நடவடிக்கைகளால் தேசிய அடையாள அட்டை வழங்கல், கிராம சேவை சான்றிதழ் பெறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல், காப்புறுதி, வாரிசுரிமை போன்ற பல பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.