சுட்டுக்கொன்ற 13 வயதுச் சிறுவன் கையில் வைத்திருந்தது போலித் துப்பாக்கி (Video)
நியூயார்க் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 வயதுச் சிறுவன் கையில் வைத்திருந்தது போலித் துப்பாக்கி என்று தெரிய வந்துள்ளது.
காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடும்போது அந்தச் சிறுவன் சுடப்பட்டதாக BBC தகவல் கூறுகிறது.
அண்மை கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் அங்க அடையாளங்கள் சிறுவனுடனும் அவனது நண்பனுடன் ஒத்துப்போவதுபோல் இருந்ததால் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருக்கும்போது சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான். அதையடுத்து அதிகாரிகள் அவனைத் துரத்த ஆரம்பித்தனர். அவன் கையில் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவழியாக அதிகாரி ஒருவர் சிறுவனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது மற்றோர் அதிகாரி சிறுவனின் மார்பில் சுட்டார்.
சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. ஆனால் அவன் உயிர் பிழைக்கவில்லை.
சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பதைக் காட்டும் காவல்துறை அதிகாரிகளின் கேமராப் பதிவுகள் வெளியிடப்பட்டன.
அதில் சிறுவன் தமது கையில் இருந்த துப்பாக்கியை அதிகாரிகளை நோக்கிக் காட்டியப்படியே ஓடுகிறான்.
அப்போது அதிகாரிகள் “துப்பாக்கி” என்று ஒருவர் மற்றவருக்குக் கூறிக் கொள்வது தெரிகிறது.
ஆனால் பிறகுதான் தெரிந்தது சிறுவன் வைத்திருந்தது போலித் துப்பாக்கி என்று.
அந்தச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய 3 காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.