யூரோ 2024: இத்தாலி போட்டியிலிருந்து வெளியேறியது (Video)

யூரோ 2024 போட்டியிலிருந்து நடப்பு வெற்றியாளர் இத்தாலி இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது.
சுவிட்ஸர்லந்து 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
37ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லந்தின் முதல் கோலை ரெமோ ஃப்ரூலர் (Remo Freuler) அடித்தார்.
பிற்பாதி தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே சுவிட்ஸர்லந்துக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது.
இம்முறை ரூபன் வர்காஸ் (Ruben Vargas) அதனைப் போட்டார்.
சுவிஸ் அணி காலிறுதியில் இங்கிலாந்து அல்லது சுலோவாக்கியாவைச் சந்திக்கும்.
போட்டிகளை ஏற்று நடத்தும் ஜெர்மனியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மழை காரணமாகத் தாமதமான ஆட்டத்தில் அது டென்மார்க்கை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இரண்டு கோல்களும் பிற்பாதியில் வந்தன.
53ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் முதல் கோலை காய் ஹாவர்ட்ஸ் (Kai Havertz) அடித்தார்.
68ஆவது நிமிடத்தில் ஜமால் முசியாலா (Jamal Musiala) ஜெர்மனியின் வெற்றியை உறுதிசெய்தார்.