இலங்கை கடற்படை வீரரின் மரணத்திற்கு காரணமான இந்திய மீனவர்களை விடுவித்து தருமாறு ராமேஸ்வர குடும்பத்தினர் கோரிக்கை!

நேற்று (30) கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் யாழ்ப்பாண டெல்ஃப்ட் கடல் எல்லையில் இந்திய மீனவர்களினால் உயிரிழந்த கடற்படை வீரரின் சாவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 இந்திய மீனவர்களையும் மன்னித்து விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பரிசீலித்து இலங்கை அரச அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களது உறவினர்களை விடுவிக்குமாறு ராமேஸ்வரம் அரசியல்வாதிகளை இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கடிதங்களை ஏற்று, இது குறித்து விவாதிக்க தமிழக முதல்வரிடம் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

10 இந்திய மீனவர்களை விடுவிக்க தமிழக முதலமைச்சர் ஊடாக மத்திய அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர்களுக்கு அறிவித்து அவர்களை விடுதலை செய்ய முயற்சிப்பதாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் உறவினர்களிடம் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்ட கலந்துரையாடல் செய்வதாக ரமேஸ்வரம் அரசியல்வாதிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம் அரசியல்வாதிகளிடம் கையளிக்கப்பட்ட கடிதங்களின் பிரதிகள் ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்படை வீரரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.