அரசின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக வாக்களிக்கவுள்ள SJBயின் ஒரு பகுதி?
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு நியமங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் விவாதம் நடைபெற உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
இதேவேளை, நாளை மறுதினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும், அன்றைய தினம் இந்த பிரேரணைக்கான வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க SJB குழுவொன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.