சம்பந்தனிடம் இருந்து வெற்றிடமான எம்.பி பதவியை பெறப்போவது யார்?

ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை விருப்பப் பட்டியலில் அடுத்துள்ள கதிரவெளி சண்முகம் குகதாசன் பெற உள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றவர்.
அங்கு அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 16770 ஆகும்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.