பெரும் ஆபத்தாக மாறிவரும் எலிக் காய்ச்சல் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
லெப்டோஸ்பிரோசிஸ் என அழைக்கப்படும் ஒரு வித காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுகாதார அமைச்சு எலி காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மழைக்காலம் காரணமாக எலி காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் 6,096 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் இருப்பதாகவும், லெப்டோஸ்பிரோசிஸின் விளைவாக இலங்கையில் 70 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அளவில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 1396 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகளில் 1341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.