ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை! – புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு.

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பெருந்தலைவர்
இரா. சம்பந்தன்  அவர்களது
இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.

 

அதற்கு முன்னர் நாளை (02) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக்
கொழும்பு – பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில்
சம்பந்தன் அவர்களது பூதவுடல்
மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் (03)
புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு,
அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு
சம்பந்தன்அவர்களது பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து
அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் ,
சம்பந்தன் ஐயா குடும்பத்தின் மத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்றும்,
அதன் காரணமாக வழமையாக அரச நிகழ்வாக முன்னெடுக்கப்படும்
இறுதி நிகழ்வுகளில் இடம்பெறும் இராணுவ மரியாதை நிகழ்வுகள்
இதில் இடம்பெறா என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.