போலி வெடிகுண்டு புரளியால் 16 வழக்குகள் ஒத்திவைப்பு!
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) விசாரணைக்கு வரவிருந்த அனைத்து வழக்குகளையும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவல் பரவியதே அதற்கு காரணம்.
அதன்படி அந்த விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணியளவில் கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதனையடுத்து பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் இணைந்து நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த அனைவரையும் வெளியேற்றி சோதனையிட்டனர்.
எவ்வாறாயினும், வெடிகுண்டு எதுவும் இருந்தமை தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
போலி அழைப்பை விடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சுமார் 16 வழக்குகள் விசாரணைக்கு வரவிருந்ததாக கூறப்படுகிறது.